shadow

பச்சை குத்தும் ரோபோ. பாரீஸ் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

robotஊசி மூலம் பச்சை குத்தும் முறை காலங்காலமாக இருந்து வரும் நிலையில் நவீன முறையில் வலியே இல்லாமல் பச்சை குத்தும் நவீன ரக ரோபோக்களை பாரீஸ் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தின் மூலம் விதவிதமாக உடல் முழுவதும் எவ்வித வலியும் இன்றி டாட்டூ குத்திக்கொள்ளலாம்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரை சேர்ந்த பச்சை குத்தும் நிபுணர்களான பியரிஎம், ஜோகன்சில்வேரா ஆகியோர் பச்சை குத்தும் ரோபாட்டை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான்பிரான் சிஸ்கோ நகரில் உள்ள ஆட்டோ டெஸ்க் சாப்ட்வேர் நிறுவனம் இந்த ரோபாட்டை உருவாக்க சாப்ட்வேர்களை கண்டுபிடித்து உதவிசெய்துள்ளனர்.

இந்த ரோபாட் முதலில் உடலை 3-டி முறையில் ஸ்கேன் செய்து அதன்பின்னர் கு எந்த மாதிரி உடல் வாகுக்கு எந்த மாதிரியான பச்சை குத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதை கண்டுபிடித்து சில படங்களை காட்டும். அந்த படங்களில் ஒன்றை நாம் தேர்வு செய்தால் உடனே ரோபாட் தானாக இயங்கி நாம் தேர்வு செய்த படத்தினை பச்சை குத்தும். இது மற்ற முறைகளை விட மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply