shadow

தனுஷின் பவர்பாண்டி’யில் ரோபோ சங்கர்தான் ஹீரோவாம்?

roboshankarதனுஷ் இயக்கி வரும் ‘பவர்பாண்டி’ படத்தின் ஹீரோவாக ராஜ்கிரண் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரசன்னா முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வரும் நிலையில் தற்போது ரோபோ சங்கரும் இந்த படத்தில் புதியதாக இணைந்துள்ளார்.

ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்த இந்த படத்தில் ராஜ்கிரண் ஒரு படம் எடுக்கின்றார் என்பதுதான் கதை. ராஜ்கிரண் எடுக்கும் படத்தில் ரோபோசங்கர் தான் ஹீரோவாம். ஏற்கனவே தனுஷூடன் மாரி’ படத்தில் காமெடியில் கலக்கிய ரோபோசங்கர், இந்த படத்தில் காமெடியில் புகுந்து விளையாடியுள்ளதாகவும், இந்த படம் ரோபோவுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது

சீன்ரோல்டான் இசையமைத்து வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Leave a Reply