shadow

ஆர்.கே.நகர் வேட்பாளர்கள், செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தேர்தல் ஆணையம்!

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்கள் செலவு கணக்கை தாக்க செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் செலவு இறுதி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதனை 30 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஆர்.கே.நகரில் பணியாற்றிய தேர்தல் செலவின பார்வையாளர்கள், வரும் 23ஆம் தேதி சென்னை வருகின்றனர்.

அவர்கள் செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கின்றனர். தேர்தலில் செலவு செய்த தொகையை, கணக்கில் சேர்க்காவிட்டால் தகுதி இழப்பாக கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply