shadow

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் சிரிப்பு நடிகர்

rj-balajiசிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள ‘ரெமோ’ திரைப்படம் வரும் ஆயுத பூஜை திருநாளில் வெளிவரவுள்ளது. நர்ஸ் உள்பட மூன்று கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் உச்சநிலைக்கு சென்ற ஜெயம் ராஜா இயக்கவுள்ள இந்த படத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். முதல்முறையாக இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதுவரை சிவகார்த்திகேயன் நண்பனாகவும், காமெடியனாகவும் நடித்து வந்த சூரி, இந்த படத்தில் இல்லை என்றும் அவருக்கு பதிலாக இந்த படத்தில் காமெடி நடிகராக நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் உறுதி செய்துள்ளது. சிவகார்த்திகேயன் படத்தில் ஆர்.ஜே பாலாஜி முதன்முறையாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வரும் 2017 தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுதான் சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply