shadow

அரவிந்தசாமியின் அடுத்த படத்தின் நாயகி இவர்தான்

அரவிந்தசாமி சமீபத்தில் நடித்த ‘தனி ஒருவன்’ மற்றும் ‘துருவா’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது.

ஏற்கனவே அவர் மனோபாலா தயாரிப்பில் த்ரிஷாவுடன் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்து முடித்துள்ள போகன் திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக போகிறது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அரவிந்தசாமியுடன் ஜோடியாக நடிக்கவிருப்பது ‘இறுதிச்சுற்று’, ஆண்டவன் கட்டளை நாயகி ரித்திகாசிங்

மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் கணேஷ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தை தயாரித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.,

Leave a Reply