shadow

ரிஷிகபூர் மகள்

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் அவர்கள் சமீபத்தில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் அவருடைய மகள் டெல்லியில் இருந்து மும்பைக்கு கார் மூலம் வருவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததாகவும் அவரும் அவருடைய உறவினர் 5 பேரும் காரில் 1800 கிலோ மீட்டர் பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் ரிஷிகபூர் மகள் மும்பையை அடைந்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை நாள் அவர் காரில் நீண்ட பயணம் செய்து டெல்லியில் இருந்து மும்பை வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அவருடன் அவருடைய உறவினர்களும் வந்துள்ளனர். மகளின் வருகைக்காக காத்திருந்த ரிஷிகபூர் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *