shadow

ஒலிம்பிக் பேட்மிண்டன். அரையிறுதியில் சிந்து வெற்றி. இன்னொரு பதக்கம் உறுதி

Rio Olympics Badminton Womenரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாக்சி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்று பதக்க பட்டியலை ஆரம்பித்து வைத்த நிலையில் இன்னொரு பதக்கம் தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளதால் மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஏற்கனவே காலிறுதியில் உலகின் 2-ம் நிலை ராங்கனையான சீனாவின் வாங் யுஹானை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற அரை இறுதியில் அவர் தர வரிசை பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹராவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21-19, 21-10 என்ற கணக்கில் வென்று ஒலிம்பிக் பேட்மின்டனில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று பெருமையை சிந்து பெற்றுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply