shadow

ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் தருவதாக பெற்ற பணத்தை திருப்பி தருவது ஏன்? வெளிவராத புதிய தகவல்
ringing bell
உலகிலேயே மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை தருகிறோம் என்று பிரமாண்டமாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித்தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.251க்கு ஸ்மார்ட்போன் தருவதாக விளம்பரம் செய்து கோடிக்கணக்கான ரூபாயை பொதுமக்களிடம் இருந்து ரிங்கிங்பெல் என்ற நிறுவனம் வசூல் செய்தது. ஆனால் இந்த தொகையில் ஸ்மார்ட்போனை கொடுக்க முடியாது என்று மற்ற நிறுவனங்கள் புகார் கூறியதை அடுத்து இந்நிறுவனத்தின் பின்னணி குறித்து விசாரணை செய்ய உ.பி.அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிறுவனத்தில் வருமான வரி ரெய்டும் நடத்தப்பட்டது.

இந்நிலையில்  ஸ்மார்ட்போனுக்காக 30ஆயிரம் பேர்களிடம் பெற்ற முன்பதிவு தொகையை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் திருப்பித்தர முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மொஹித் கோயல் கூறும்போது, “ப்ரீடம் 251 செல்போனுக்காக 30 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் பெற்ற முன்பதிவு தொகையை திருப்பித் தருகிறோம். செல்போனை தரும் போது அந்தத் தொகை பெற்றுக் கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்த போனுக்காக முதல் நாளில் 30ஆயிரம் பேர்கள் முன்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மலிவு விலையில் ஸ்மார்ட்போன் வழங்கும் இந்த நிறுவனத்தின் இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர்தான் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை வசூலித்து அந்த பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து பெரிய லாபத்தை பெற்ற பின்னர் தற்போது மக்களுடைய பணத்தை திருப்பித்தருவதாக ரிங்கிங் பெல் நிறுவனம் கூறுவதாகவும் இதற்கு மத்திய அமைச்சரும் உடந்தை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Chennai Today News: Ringing Bells begins refunding customers after allegations of fraud

Leave a Reply