உலகின் மிகப்பெரும் பணக்கார இளைஞரை காதலிக்கும் பாடகி ரிஹானா

உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாடகியான ரிஹானா, உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள சவுதி அரேபிய தொழிலதிபர் ஹசன் ஜமீல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இருவரும் ஸ்பெயினில் ஒன்றாக சேர்த்து ஓய்வு எடுத்து வருவதாகவும், அதுமட்டுமின்றி இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் படங்களும் சமூக இணையதளங்களில் வெளியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாடகி ரிஹானா ஏற்கனவே டிரேக் என்பவரை காதலித்தார். அதேபோல் ஹசன் ஜமீலும் ஏற்கனவே பிரபல மாடல் அழகி நவோமி காம்பெல்லை காதலித்து வந்தார். இப்போது இருவரும் தங்களுடைய துணையை பிரிந்துவிட்டனர். ரிஹானா-ஜமீல் இருவரிடமும் புது காதல் அரும்பி இருப்பதாகவும், இந்த காதலாவது ஜெயிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *