shadow

ஆதார் அட்டை வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ஒவ்வொரு இந்தியனும் ஆதார் அட்டை கண்டிப்பாக பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆதார் இருந்தால் மட்டுமே பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் வரை பெற முடியும் என்றும் அனைத்து விதமான சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆதார் அட்டையின் விபரங்கள் வெளியே கசிந்து வருவதாகவும், இதனால் தனிமனித ரகசியம் பாதுகாப்பற்ற தன்மையில் உள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்துவந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில், ‘தனிமனித ரகசியம் காப்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமையே’ என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகளுமே, தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என்ற கருத்தில் மாறுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply