shadow

download (3)

என்னென்ன தேவை?

வேகவைத்த சாதம் – 1 கப்,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம்  – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்,
புதினா இலை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
 
எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து அதில் சோள மாவு மற்றும் மசாலா சாமான்கள், உப்பு சேர்த்து நன்கு  பிசைந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கட்லெட் போல் தட்டி தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி இருபுறமும்  திருப்பிப் போட்டு பொன்னிறமாக எடுத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

 

Leave a Reply