shadow

வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது ரிசோர்ஸ் 2ஏ. இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

1பூமியை கண்காணித்து புகைப்படங்கள் அனுப்பும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் இன்று காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ரிசோர்ஸ் சாட்-1 கடந்த கடந்த 2003ஆம் ஆண்டும், ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைக்கோள் கடந்த 2011ஆம் ஆண்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ தற்போது ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோளையும் வெற்றிகரமாக ஏவியுள்ளது. 1,235 கிலோ எடையில், பூமியை கண்காணிக்கும் இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 10.25 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி36 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

முன்னதாக இதற்கான கவுண்ட்டவுன் நேற்று இரவு 10.25 மணிக்கு தொடங்கப்பட்டு சரியாக திட்டமிட்டபடி ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 817 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம், பூமியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம்பிடித்து அவ்வப்போது பூமிக்கு அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிசோர்ஸ் 2ஏ வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply