shadow

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம். 70 பேர் பலி

shadow

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் நேற்று நிகழ்ந்த பூமியதிர்ச்சியில் சுமார் 70 பேர் பலியானதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்து குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இதன் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், டெல்லி, இமாச்சல் பிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய வடமாநிலங்களிலும் உணரப்பட்டது. சென்னையின் சில பகுதிகளிலும் இந்த நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகளில் வெளியேறிய மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் தான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரிய மற்றும் சிறிய கட்டடங்கள் இடிந்து விழுந்தது. இந்த இடுபாட்டில் 46 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடுபாடுகளில் சிக்கி ,12 பள்ளி மாணவிகள் உட்பட 24 பேர் பலியானதாகவும், 130 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் இந்த நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கினாலும் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. வட மாநில பொதுமக்கள் பீதியடைந்து வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நில அதிர்வு சென்னையிலும் உணரப்பட்டது. நந்தனம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் நில அதிர்வு காணப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். இதனால் வீடுகளில் இருந்து வீதிகளுக்கு ஓடிவந்து தஞ்சம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தனர்.

English Summary: Rescuers hunt for survivors of massive Afghan-Pakistan quake

 

Leave a Reply