shadow

சிங்கப்பூரில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’

remo2016ஆம் ஆண்டின் SIIMA விருது வழங்கும் விழா வரும் ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கோலிவுட்டின் பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள நிலையில் இந்த விழாவில் தனது ‘ரெமோ’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் கபாலி’ படத்தின் இசை வெளியீடு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள தீம் மியூசிக் மற்றும் சிங்கிள் பாடலை ரசிக்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்டை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply