shadow

முதன்முதலாக ஜப்பானில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் படம்

remoசிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த ‘ரெமோ’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஆயுதபூஜை தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘ரெமோ’ திரைப்படம் ஜப்பானில் உள்ள Nagoya பகுதியில் உள்ள New Minato Aeon Mall என்ற திரையரங்கில் ஒரே ஒரு காட்சி மட்டும் திரையிடப்படவுள்ளது.

இந்த காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து காட்சிகள் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.

இதுவரை ஜப்பானில் ரஜினி படங்களுக்கு மட்டுமே மிக வேகமாக முன்பதிவு செய்யப்படும் நிலையில் முதல்முறையாக ‘ரெமோ’ படத்திற்கும் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘ரெமோ’ படத்திற்கு 2000 ஜப்பான் யென்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் ரசிகர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply