shadow

திருட்டு டிவிடி கும்பலுக்கு ‘ரெமோ’ வைத்த ஆப்பு

remo3சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள ‘ரெமோ’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரசிகர்களை போலவே திருட்டு டிவிடி கும்பலும் இந்த படத்தை முதல் நாளே வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருட்டு டிவிடி கும்பலுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ‘ரெமோ’ படத் தயாரிப்பாளர் தற்போது புத்திசாலித்தனமான ஐடியா ஒன்றை கடைபிடிக்கவுள்ளதாகவும், இதனால் குறைந்தபட்சம் முதல் நாளில் திருட்டி டிவிடி வெளியாவதை தடுக்க முடியும் என்ற்ம் நம்பப்படுகிறது.

அந்த புத்திசாலித்தனமான ஐடியா என்னவெனில் ‘ரெமோ’ அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் இல்லை. அன்றைய தினம் இந்தியாவில் மட்டும்தான் ரிலீஸ் ஆகிறது. ஒருநாள் தாமதமாக அக்டோபர் 8ஆம் தேதி வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

திருட்டு டிவிடிக்களுக்கு மிக முக்கிய காரணம் வெளிநாடுகளில் முந்தைய நாள் இரவே படத்தை ரிலீஸ் செய்வதுதான் என்று கூறப்படும் நிலையில் ரெமோ தயாரிப்பாளரின் இந்த முடிவு நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply