shadow

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

remoசிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரஜினிமுருகன்’ சூப்பர் ஹிட் ஆகியதை அடுத்து அவர் நடித்து வரும் அடுத்த படத்திற்கான டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர் ‘ரெமோ’ என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளனர்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய அந்நியன் திரைப்படத்தில் விக்ரம் ரெமோ என்ற கேரக்டரில் ப்ளேபாய் கேரக்டரில் நடித்திருந்தார் .சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்திற்கு ‘ரெமோ’ என்ர டைட்டில் வைக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ‘ப்ளேபாய் கேரக்டரில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

Leave a Reply