shadow

‘ரெமொ’ தேவி’ வசூல் விபரங்கள்

remo-deviகடந்த ஆயுத பூஜை தினத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ மற்றும் பிரபுதேவாவின் ‘தேவி’ ஆகிய இரு படங்களும் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. விஜய்சேதுபதியின் ‘றெக்க’ திரைப்படம் சுமாரான ரிசல்ட்டை கொடுத்துள்ளது.

இந்நிலையில் ரெமோ மற்றும் தேவி படங்களின் சென்னை மற்றும் தமிழக வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

சிவகார்த்திகேயனின் ரெமோ திரைப்படம் கடந்த வாரத்தில் மட்டும் சென்னையில் 23 திரையரங்க வளாகங்களில் 308 காட்சிகள் திரையிடப்பட்டு 44,94,160 ரூபாய் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி அக்டோபர் 7 முதல் 24 வரையிலான காலகட்டத்தில் இந்த படம் ரூ.5,55,06,780 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபுதேவாவின் ‘தேவி’ திரைப்படம் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் ரூ.36,91,780 வசூல் செய்துள்ளது. மேலும் அக்டோபர் 7 முதல் 24 வரை இந்த படம் ரூ.2,07,12,340 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply