shadow

thumba flower (leuca indica)-732

மழைக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஜலதோஷதம் பிடித்துக்கொள்ளும். அதனை விரட்ட வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய மருந்து கஷாயம்தான். அதும் தும்பை பூவை பாலில் போட்டு காய்ச்சி குடிக்கனும்னா சொல்லவா வேனும்.. ஜலதோஷதம் நம்மள விட்டே ஓடிப்போகும். செய்துதான் பாருங்களேன். அப்புறம் சொல்லுவீங்க பாட்டியோட வைத்தியத்தப்பத்தி…..

தும்பைப் பூ
 
தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

அத்திக்காய்
 
அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல, ஒரே தடவை அலம்பி,   துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. 

அக்கரகாரம்
 
மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து. உமிழ்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்கமுடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.

3. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் ஆறும். 
 
மிளகு
 
இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை மிளகுக் குழம்பு வைத்துச் சாப்பிட்டு வந்தால் கீல் வாயு நோய் குணமாகும்.

Leave a Reply