shadow

வெடித்து சிதறிய ஜியோ மொபைல். அதிர்ச்சியில் பயனாளிகள்

jio1சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 மாடல் அவ்வப்போது வெடித்து சிதறுவதாக வெளிவந்த தகவலை அடுத்து அந்நிறுவனம் லட்சக்கணக்கான போன்களை திரும்ப பெற்றது.

இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் லைப் ஸ்டார்ட்போன் வெடித்து சிதறியதாக டுவிட்டரில் ஒரு பயனாளி புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்டதில் இருந்து ஜியோ லைப் மொபைல் வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்த தன்வீர் சாதிக் என்பவர் கூறியபோது, ‘ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் லைப் மொபைல் வெடித்ததிலிருந்து எனது குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு லைப் மொபைலை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இவரின் கருத்தை தொடர்ந்து , ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply