shadow

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சம்மர் ஆஃபர் டிராய் நெருக்குதல் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் புதிய பெயரில் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு தன் தனா தன்’ என்று பெயரிட்டுள்ளது

இந்த திட்டத்தின்படி ஜியோவின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.309 மற்றும் ரூ.509-க்கு வழங்கப்படுகிறது. நான் பிரைம் அல்லது புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.408 மற்றும் ரூ.608-க்கு வழங்கப்படுகிறது.

ரூ. 309-க்கு ரீசாஜ் செய்யும் பிரைம் வாடிக்களையாளர்கள் நாள்தோறும் 1 GB டேட்டாவும், ரூ. 509-க்கு ரீசாஜ் செய்யும் பிரைம் வாடிக்களையாளர்கள் நாள்தோறும் 2 GB டேட்டாவும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ரூ.408 ( 309+99)-க்கு ரீசாஜ் செய்யும் நான்- பிரைம் வாடிக்களையாளர்கள் நாள்தோறும் 1 GB டேட்டாவும், ரூ. 608 (509=99) -க்கு ரீசாஜ் செய்யும் நான்- பிரைம் வாடிக்களையாளர்கள் நாள்தோறும் 2 GB டேட்டாவும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் பெறுவார்கள்.

மேலும் வழக்கம்போல் அனைத்து திட்டங்களிலும் ஜியோவின் இலவச போன் கால்கள், குறுஞ்செய்திகள், ஜியோ ஆப்ஸ் ஆகியவை எப்போதும் போல் தொடரும். இந்த ஆஃபரை பெற ஏப்ரல் 15-ம் தேதிக்குள், வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply