shadow

relatives2

மலேசிய விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளின் கதி என்ன என்று தெரியாத நிலையில் அவர்களுடைய குடும்பத்தினர்கள் பெரும் கவலையில் உள்ளனர். இதனிடையே சீனாவில் இருந்து கோலாலம்பூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த பயணிகளின் உறவினர்கள் நேற்று வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டனர்.

relatives

மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் விரைவில் தொடங்க இருப்பதால், அதில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்கள் அதே ரிசார்ட்டில் ஏற்கனவே அறைகள் ரிசர்வ் செய்துள்ளபடியால், தற்போது தங்கியிருப்பவர்களை காலி செய்ய ரிசார்ட் அதிகாரிகள் பயணிகளின் உறவினர்களை கேட்டுக்கொண்டனர்.

relatives 1ஆனால் பயணிகளின் உறவினர்கள் தாங்கள் தேடிவந்த உறவினர்களின் கதி என்ன என்பது தெரிய வரும்வரை காலி செய்ய முடியாது என்று பிடிவாதம் பிடித்தனர். ஆனால் அதன் பின்னர் உறவினர்களின் மனநிலையும் மிகவும் மோசமாக இருப்பதாகவும், தற்போது அவர்கள் மலேசியாவை விட்டு வெளியேறுவது அவர்களுடைய மனநிலைக்கு நல்லது என சைக்கிரியாரிஸ்டுகள் ஆலோசனை வழங்கியதால், மலேசிய அரசே அவர்கள் அனைவரையும் சீனாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தது.

நேற்று விமான பயணிகளின் உறவினர்கள் அனைவரும் சீனாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

Leave a Reply