shadow

5bfc2137-7c00-489c-9e6a-635371edb850_S_secvpf

தேவையான பொருட்கள் :

சிவப்பரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
முடக்கத்தான் கீரை – 1 கட்டு
உளுந்து – கால் கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• சிவப்பரிசி, பச்சரிசி, உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து உப்பு கலந்து புளிக்க வைக்கவும்.

• முடக்கத்தான் கீரையை நன்றாக கழுவி மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

• புளித்த மாவில் அரைத்த கீரையை நன்றாக கலந்து கொள்ளவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

• இந்த சிவப்பரிசி – முடக்கத்தான் தோசை மிகவும் சத்து நிறைந்தது.

• கால் மூட்டு வலி உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை 3 மாதம் தொடர்ந்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் மூட்டு வலி தீரும்.

Leave a Reply