டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கிய 11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. அதையொட்டி போட்டிப் பி‌ரிவில் தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அமிதாப்பச்சன் பெய‌ரிலான இளம் சாதனையாளர் விருது இசையமைப்பாளர் அனிருத்துக்கு வழங்கப்பட்டது. பரதேசி படத்துக்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை அதர்வா பெற்றார். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது தங்கமீன்கள் சாதனாவுக்கும், ஹ‌ரிதாஸ் பிருத்விராஜுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஹ‌ரிதாஸ் இரண்டாவது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது‌ம், தயா‌ரிப்பாளர், இயக்குனருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் ப‌ரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. முதல் ப‌ரிசை தங்கமீன்கள் தட்டிச் சென்றது. இந்த விருதுகளை ஹிந்திப்பட இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா வழங்கினார்.

விருதுக்கு‌ரியவர்களை இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், ஸ்ரீப்‌ரியா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *