25 வயதில் வரக்கூடிய வெள்ளை முடிக்கான காரண‌ங்கள்

 

hair-problem

உங்களுக்கு நரை ஏற்ப‌டுவது இயல்பு தான் ஆனால் அது 25 வயதிலேயே என்றால் கவனிக்க வேண்டிய ஒன்று! இந்த வயதில் வெள்ளை முடி ஏற்படுவது மிகவும் கவலைக்குரியது. இது உங்கள் வாழ்க்கை முறை, மரபணுக்கள், அல்லது மன அழுத்தம் போன்ற சில காரணங்களால் சீக்கிரமாக ஏற்படும், எனவே இதை நாம் எப்படியாவது வென்றாக வேண்டும்.
உங்களுக்கு 25 வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டிருந்தால், முதலில், அதற்கான‌ காரணங்களை முதலில் தெரிந்துக் கொள்வோம். இது எப்படி ஏற்படுகிறது?
25 வது வயதில் ஏற்படும் நரை முடிக்கான‌ 6 காரணங்கள்:
1. மரபணு பாதிப்பு: தோல் மருத்துவர்கள் 25 வயது நரைக்கு மரபியலும் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். உங்கள் பெற்றோர் அல்லது தாத்தாவிற்கு இந்த குறைபாடு இருந்து இருந்தால், உங்களுக்கும் வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக உள்ளன.

2. மருத்துவ காரணங்கள்: ஆமாம், சில மருந்துகளின் விளைவு கூட நரை முடியை ஏற்படுத்தும்! சில நேரங்களில் கடும் சளி, நாள்பட்ட மலச்சிக்கல், இரத்த சேகை, அல்லது தைராய்டு சுரப்பி பிரச்சினைகள், இதயம் சம்பந்தப்பட்ட‌ பிரச்சனைகள் மூலமாகவும் இது ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில், தைராய்டு நரை ஏற்படுவதற்கான‌ முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி முறைகளும் முடியை சீக்கிரம் மோசமாக்கி விடும். இது தவிர இந்த அனைத்து கடுமையான மருத்துவ நிலைகளால், முன்கூட்டியே நரை முடி ஏற்பட வழி வகுக்கிறது. உங்கள் தோலின் கீழ் பகுதியில் உள்ள நிறமி செல்கள் பாதிப்படையும் போது, இந்த கடுமையான நிலைமை நடக்கிறது.
3. ஊட்டச்சத்து குறைபாடு: நம்பினால் நம்புங்கள், 25 வயதில் நரை என்பது உங்கள் சமநிலையற்ற உணவுமுறையும் ஏற்படுத்துகிறது. நீங்கள் விட்ட‌மின் B12, அயோடின், தாமிரம், இரும்பு, புரதங்கள், அமினோ அமிலங்கள், மற்றும் ஃபோலிக் அமிலங்கள் போன்ற இவற்றை எல்லாம் உட்கொள்ளுவதை குறைத்தால், நீங்கள் சிறு வயதிலேயே உங்கள் முடியின் நரைத்தன்மையை சீக்கிரம் பெறுவீர்கள். தவறான உணவு முறையானது உடலில் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இது இறுதியில் உங்கள் முடியின் மீதே பக்க‌ விளைவை காட்டுகிறது.
4. ரசாயனப் பொருட்கள் மற்றும் மின்னணுவின் அதிக பயன்பாடு: நீங்கள் முடிக்கு சாயங்கள் போடும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், கட்டாயம் நீங்கள் முடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி மின்சாரம் மூலம் முடியை ட்ரையர் மற்றும் அயர்னிங் அடிக்கடி செய்வதாலும் இது சீக்கிரமே ஏற்படும். முடியை சரியாக பராமரிக்காமல் இருந்தால் எந்த வகையான வலுவான முடியும் நிறம் மற்றும் பளபளப்பை சீக்கிரமே இழந்து விடும். இதனால் உங்களின் உச்சந்தலையின் சரியான‌ சீரமைப்பு உங்களுக்கு மேலும் சில‌ பிரச்சனைகளை ஏற்படுத்தி இன்னும் மோசமான விளைவுக்ளை கொடுக்கும்.
5. புகைக்கு அடிமையாதல்: சில ஆய்வுகள் முடிவில், இந்த மாதிரியான‌ செயலினால் பாதிப்பு ஏற்படுகிறது. புகை கூட இந்த பிரச்சினையை சீக்கிரம் ஏற்படுத்த காரணமென்கின்றனர். இது புகை பிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் கண்டறிந்த முடிவாகும், புகை பிடிப்பவர்களின் முடி அதிக ஆபத்துக்களை சந்திப்பதோடு அவர்களின் ஆரம்ப கால்ங்களிலேயே சீக்கிரம் நரைக்க ஆரம்பித்து விடுகின்றது. எனவே நீங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றினால் ஒழிய இதிலிருந்து எளிதில் தப்பிக்க முடியாது.
6. மன அழுத்தம்: மன அழுத்தம் மற்றும் அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் மற்றும் கவலையும் முடி நரைப்பதற்கான காரணமாக உள்ளது. அதிகமாக உணர்ச்சிவசப்படும் போதும் மற்றும் மன‌ அழுத்தத்தாலும் இது ஏற்படுகிறது என்றால் மிகையல்ல‌. நீங்கள் கவலைப்படும் போது, வைட்டமின் பி நிலைகள் கணிசமாக உங்கள் உடலில் குறையும். சில விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மயிர்க்கால்களில் உள்ள டிஎன்ஏ போன்ற காரணிகள், மன அழுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. எனவே, நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் அல்லது மன கவலைகளை அனுபவிக்கு போதும், மன அழுத்தத்தின் போதும் ஏற்படுகிறது.
உங்களுக்கு 25 வயதிலேயே உச்சந்தலையில் வெள்ளை முடி இருந்தால் அதை சிறிதும் தாமதிக்காமல், ஒரு தீவிரமான சிகிச்சை முறையை மேற்கொண்டு, உங்கள் வாழ்க்கைமுறையை மாற்றுங்கள் அல்லது மருத்துவரை பார்த்து இதற்கான தீர்வை விரைவாக பெறவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *