shadow

real madridஸ்பெயி நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து ஆட்டத்தின் கிளப்பான ரியல் மாட்ரிட் இந்த சீசனில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற லா லிகா தொடரில் 2-வது இடத்தை மட்டுமே அந்த அணியால் பிடிக்க முடிந்தது.

மேலும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரைஇறுதியில் தோல்வியை தழுவியது. இதன் எதிரொலியாக ரியல் மாட்ரிட் கிளப் அணியின் பயிற்சியாளர் இத்தாலி நாட்டை சேர்ந்த கார்லோ அன்சிலோட்டி மீது அதிரடி நடவடிக்கை எடுக்க ரியல் மாட்ரிட் அணியின் நிர்வாகம் முடிவு செய்தது.

ஒப்பந்த காலம் இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக ஸ்பெயின் நாட்டை சேந்த ரபெல் பெனிட்ஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply