shadow

stock-market-bullஇந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் இன்று குறுகிய கால வட்டி விகிதத்தை  7.75 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அவருடைய இந்த அறிவிப்பினால் வீடு மற்றும் வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வட்டி விகித குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தை இன்று வர்த்தகத் தொடக்கத்திலேயே புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றன. முதல் முறையாக சென்செக்ஸ் 30 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 407 புள்ளிகள் உயர்ந்து 30,001 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 112 புள்ளிகள் அதிகரித்து 9,109 புள்ளிகளானது. மேலும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பும் 21 காசு உயர்ந்து 61 ரூபாய் 66 காசானது.

Leave a Reply