shruthi rainaஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவும் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாவும், இருவரும் டேட்டிங் செல்வதாகவும் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்த தகவலை இருவருமே தனித்தனியாக மறுத்து வந்தனர். இந்த பிரச்சனை கிட்டத்தட்ட ஓய்ந்துவிடும் நிலையில் நேற்று சுரேஷ் ரெய்னாவின் நெருங்கிய நண்பரும், சகவீரருமான ரவீந்திர ஜடேஜா டுவிட்டரில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் ரெய்னாவும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பது உண்மைதான் என்றும், இருவரும் அடிக்கடி டெட்டிங் செல்வதை எங்கள் அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் டுவிட் செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரவீந்த்ர ஜடேஜா பெயரில் வந்த டுவிட் போலியானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஜடேஜாவின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கை துவக்கி, பொய்யான தகவலை மர்ம நபர் ஒருவர் வெளியிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கண்டறிய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *