‘கணிதன்’ தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜா
ravi teja
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கணிதன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றதை அடுத்து இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ‘கணிதன்’ திரைப்படத்தை இயக்கிய டி.என்.சந்தோஷ் தெலுங்கிலும் இந்த படத்தை இயக்கவுள்ளார். அதர்வா நடித்த வேடத்தில் ரவிதேஜாவும், கேதரின் தெரஸா கேரக்டரில் மீண்டும் அவரே நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கவுள்ளது.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *