shadow

ஏ.டி.எம்-ஐயும் விட்டு வைக்காத ரேன்சம்வேர் வைரஸ்: பெங்களூரில் பொதுமக்கள் அவதி

உலகம் முழுவதிலும் உள்ள கம்ப்யூட்டர்களை அச்சுறுத்தி வரும் ரேன்சம்வேர் வைரஸ் தற்போது ஏ.டி.எம் இயந்திரங்களையும் முடக்க ஆரம்பித்துவிட்டதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இமெயிலில் உள்ள அட்டாச்மெண்ட் வழியாக ரேன்சம்வேர் வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே நுழைந்து அதில் உள்ள டேட்டாகளை அழித்துவிடுவதாக கூறப்படும் நிலையில் பெங்களூரில் நூற்றுக் கணக்கான ஏடிஎம்கள் நேற்று ரேன்சம்வேர் வைரஸ் காரணமாக செயல்படவில்லை என்ற தகவல் வெகுவேகமாக பரவி வருகிறது.

பெங்களூரின் பல ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை, அவுட்ஆப் ஆர்டர் என்ற போர்டுகள் தொங்கியுள்ளதால் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலைக்கு ரேன்சம்வேர் வைரஸ் தான் பிரச்சனையா? என்று வங்கி அதிகாரிகள் உறுதி செய்யாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Reply