மும்பையில் கமல் நாயகிக்கு பிறந்த பெண் குழந்தை
ranimukerji
கடந்த 2000ஆம் ஆண்டில் வெளிவந்த கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு இன்று மும்பை தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு பாலிவுட் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஆதித்யா சோப்ராவுக்கும், நடிகை ராணி முகர்ஜிக்கும் இத்தாலியில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராணி முகர்ஜி கர்ப்பமானார். இந்நிலையில் இன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் மும்பை மருத்துவமனை தெரிவித்துள்ளது. ராணி முகர்ஜியின் குழந்தைக்கு ஆதிரா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதித்ய சோப்ரா – ராணி முகர்ஜி தம்பதிக்கு சென்னை டுடே நியூஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.,

English Summary: RaniMukerji gives birth to a little girl named Adira

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *