shadow

LRG_20150915102902133466

மேட்டுப்பாளையம் இலுப்பநத்தம் ரங்கராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இலுப்பநத்தத்தில், 300  ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாயகி சமேத ரங்கராயப்பெருமாள் கோவிலும், இதன் அருகே வீரமாஸ்தியம்மன் கோவிலும் உள்ளன. இடிந்த  நிலையில் இருந்த கோவிலை, பொதுமக்கள் கோபுரம், மண்டபம் அமைத்து, புதிதாக கட்டினர். இக்கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக  நடந்தது. முதல் நாள், பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். இரண்டாம் நாள், புண்யாகவாசனம்,  வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம் ஹோமம், திருவாராதனம் நடந்தன.  இரவு பெருமாள், கருட சுவாமி சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டன. மூன்றாம் நாள் வேதபாராயணம், திவ்யப்பிரபந்தம், மகா பூர்ணாஹூதி உபசாரங்கள் நடந்தன. தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம்  நடந்தது. பின், அனைவருக்கும் தீர்த்தப்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தை, காரமடை வேதவியாச சுதர்சன  பட்டர் நடத்தி வைத்தார்.

Leave a Reply