shadow

katrina kaifபாலிவுட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பிரபல நடிகை கேத்ரீனா கைப் தங்கி இருக்கும் வீட்டுக்கு வாடகை மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்கும் கேத்ரீனா கைப் இதுவரை சொந்த வீடு வாங்கவில்லை. அவர் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கின்றார். மும்பையில் அவர் தங்கியிருக்கும் பிரமாண்டமான வீட்டிற்கு அவர் மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் வாடகை கொடுத்துக்கொண்டு இருப்பதாக மும்பை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை கடற்கரையோரம் இந்த அழகிய வீடு அமைந்து உள்ளது. வீட்டின் ஜன்னலை திறந்துவிட்டால் அங்கிருந்தபடியே கடற்கரையோர அழகுகளை கண்டு ரசிக்கலாம் ரசிக்கலாம். எனவேதான் அதிக வாடகையை பொருட்படுத்தாமல் இந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

மேலும் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிகை கேத்ரீனாவை காதலிப்பதாகவும், அவர்தான் இவ்வளவு அதிக வாடகையில் கேத்ரீனாவுக்கு வீடு ஏற்பாடு செய்த கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட காத்ரீனா, சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அந்த நாட்டிலேயே முதலீடு செய்து வருகிறார் என்றும், அதனால்தான் மும்பையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply