shadow

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மீண்டும் ரம்யா நம்பீசன்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான ‘பீட்சா’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசன், மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றில் பிரபுதேவா ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ரம்யா நம்பீசன் நடித்து வருவதாகவும், அவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கின்றாரா என்பது குறித்து படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ஜில் ஜங் ஜக்’ படத்தில் நடித்த சனாத் ரெட்டி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

சந்தோஷ் நாராயணன் இசையில் திரு ஒளிப்பதிவில் வளர்ந்து வரும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.

Leave a Reply