கமலுக்கு பதில் கமல் படத்தில் நடித்த நடிகை பிக்பாஸை தொகுத்து வழங்குகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் வரும் சனி, ஞாயிறில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சில வாரங்களுக்கு தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசனுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன், ‘பஞ்சதந்திரம் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.