shadow

1

ரமலான் மாதப்பிறப்பான இன்று நோன்பு நோற்கும் கட்டாயக் கடமை துவங்குகிறது. பசியோடு போராடுபவர் ஒருபுறம், நன்றாக சாப்பிடுபவர்கள் ஒருபுறம் என இருபிரிவினர் உலகில் உள்ளனர். இவர்களில் பசித்திருப்பவர்கள் படும் பாட்டை, நாமும் உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். சரி…பசியைப் போக்க வழி என்ன?

ஏழைகளுக்கு அதிகமாக தானம் செய்வது தான். பணக்காரர்களுக்கு மட்டுமல்ல! ஏழைகளும் கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் நல்ல எண்ணங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் நன்மையான வார்த்தைகளை பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய சிரமத்தில் பங்கேற்க வேண்டும். ஒரு ஏழைக்குடும்பத்தையாவது ஏற்றுக் கொண்டு, அவர் களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவ வேண்டும். விருந்தினர்களை உபசரிக்க வேண்டும். பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும். தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்ற பொன்மொழி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நல்ல சிந்தனைகளை மனதில் கொண்டு ரமலானை வரவேற்போம். மகிழ்வுடன் நோன்பைத் துவங்குவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி

Leave a Reply