shadow

1ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடியில், நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளித்து கொண்டிருந்த இலங்கை வாலிபர் ஒருவரை தமிழக மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

பாம்பன் பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கும் போது, நடுக்கடலில் வாலிபர் ஒருவர் டீசல் கேனை பிடித்து உயிருக்கு போராடியவாறு தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்து, உடனடியாக அவரை காப்பாற்றி தமிழக கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.

கரைக்கு வருவதற்கு முன் மயக்கமான அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைக்கு தமிழக மீனவர்கள் ஏற்பாடு செய்தனர். சிகிச்சைக்கு பின்னர் மயக்கம் தெளிந்த அந்த வாலிபர், இலங்கையில் உள்ள முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர் என்றும், அவருடைய பெயர் வசீகரன் என்பதும் தெரியவந்தது.

இலங்கை ராணுவத்தினர் தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும், அதற்கு பயந்துகொண்டு தான் தப்பித்து இந்தியா வர முடிவு செய்ததாகவும், 4 மீனவர்கள் உதவியால் படகின் மூலம் மணல்தீடை வரை வந்ததாகவும், அதன்பின்னர் நீந்தியே இந்தியா சென்றுவிடலாம் என எண்ணி டீசல் கேனை பிடித்தபடியே ராமேஸ்வரம் நோக்கி வந்ததாக கூறும் அவர், பின்னர் ராமேஸ்வர மீனவர்கள் தன்னை காப்பாற்றியதாகவும் கூறினார். கியூ பிரிவு போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.

Leave a Reply