நானும் அஜித்தும் முன் ஜென்மத்தில் இருந்தே பந்தமானவர்கள். ரமேஷ் கண்ணா

அஜித் நடித்த ‘வரலாறு’, ‘வில்லன்’ மற்றும் விஜய் நடித்த ‘ப்ரெண்ட்ஸ்’ உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா. இவர் அஜித் நடித்த ‘தொடரும்’ என்ற படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரமேஷ் கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் குறித்து குறிப்பிடும்போது, ‘எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்ம பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன். நான் இயக்கிய முதல் படமான ‘தொடரும்’ படத்தில் அஜித் நடித்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் கொண்டிருந்த அஜித், புதுமுக இயக்குநர் என நினைக்காமல் என்னுடைய இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவருடைய நிறைய படங்களில் நான் நடித்திருப்பதும் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்று பேட்டி ஒன்றில் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *