shadow

இதை நாம நம்பணும், நம்பியே ஆகணும்: தினகரனை டுவிட்டரில் கலாய்த்த ராமதாஸ்

சமீபத்தில் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், இந்த தேர்தலுக்காக செய்த செலவுக்கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் ஒப்படைத்திருந்தார். அவர் இந்த தேர்தலுக்காக செலவு செய்த தொகை ரூ.16.48 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் தினகரன் செலவு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவர் வெறும் 16.48 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனின் தேர்தல் செலவு ரூ.16.48 லட்சம்: ஆணையத்திடம் கணக்கு – அய்யய்யோ… இதை நாம நம்பணும், நம்பித் தானே ஆகவும்..வேற வழி? என்று கூறியுள்ளார். இவருடைய இந்த டுவீட்டுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Reply