shadow

ராமர் கோவில் வழக்கின் தீர்ப்பு எப்போது? சுப்பிரமணியன் சுவாமி கருத்து

subramanian-swamy-4அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டும் பிரச்சனை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக பாஜகவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். தீர்ப்பு வந்தவுடன் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ”ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும் என நாங்கள் நம்புகிறோம். அந்த தீர்ப்பு வந்தவுடன் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கும். இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக இந்த பணிகள் தொடங்கப்படும். இதற்கான செயல்திட்டம் 9-ம் தேதி வெளியிடப்படும்.

ராமர் கோவில் கட்டும் பணியை விஷ்வ இந்து பரிஷத் முன்னெடுக்காது. இதை கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை. இந்து மற்றும் முஸ்லிம்களின் பரஸ்பர ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டப்படும். இதற்கும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கும் தொடர்பில்லை”

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

Leave a Reply