shadow

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை. ரமணன் தகவல்
rain
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக கன மழை பெய்துள்ளது என்றும், இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு தொடரும் என்றும் கூறியுள்ளார்.

தெற்கு அந்தமான் உருவான காற்றழுத்த மண்டலம், மேற்கு நோக்கி நகர்ந்து வங்கக் கடலின் தென்கிழக்கே நகர்ந்துள்ளது. இது நாளை தாழ்வு நிலையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும்.

எஞ்சிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். பல இடங்களில் தொடர் மழையும், இரவு நேரத்தில் கன மழை பெய்யும் என்றும் ரமணன் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 34 செ.மீ. மழையும், புழல், செங்குன்றம் பகுதிகளில் தலா 21 செ.மீ. மழையும், செய்யாறு பகுதிகளிலும் 19 செ.மீ. மழையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மாதவரம், திருவள்ளூர், ஆவடி பகுதிகளில் தலா 16 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கம், சோழவரத்தில் தலா 15 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது

Leave a Reply