shadow

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஜிஎஸ்டிஒயை எதிர்த்த மோடி இன்று ஆதரிப்பது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் காரணமாக நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பால் திரைத்துறை, பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களாகவே பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் இன்று முதல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ‘ஜிஎஸ்டி-யை ஆதரித்து, மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் அரசுகள் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில், தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘ஜிஎஸ்டி-யை ஆதரித்து, ஆளும் அரசு மக்களுக்கு துரோகம்செய்துள்ளது. குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது ஜிஎஸ்டி-யை எதிர்த்த மோடி, பிரதமரான பின்பு அதை நிறைவேற்றியுள்ளார். ஜிஎஸ்டி-யால் விலைவாசி கண்டிப்பாக உயரும், ஏழை நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply