shadow

ரஜினி பயப்படாமல் இலங்கைக்கு போவாரா என்று பார்ப்போம். சுப்பிரமணியம் சுவாமி

கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது ரஜினிகாந்த் இலங்கை செல்வது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருசில கட்சிகளின் எதிர்ப்பை மீறி பயப்படாமல் நடிகர் ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே திருமாவளவன் உள்ளிட்ட ஒருசில அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்ல கூடாது என்று கூறி வருகின்றனர்.

முன்னதாக லைகா நிறுவனம் ஈழத்தமிழர்களுக்காக இலங்கையில் கட்டியுள்ள 150 வீடுகளை தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதுஜ்.

Leave a Reply