shadow

ராஜீவ் மேனனின் அடுத்த பட தலைப்பு ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’
rajiv-menon
பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் இயக்குனராக மாறி அரவிந்தசாமி-பிரபுதேவா நடித்த ‘மின்சார கனவு’ மற்றும் அஜித்-மம்முட்டி-ஐஸ்வர்யாராய் நடித்த கண்டுகொண்டே கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஒரு புதிய படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் நாயகியாக ஜி.வி.பிரகாஷ் மற்றூம் நாயகியாக ஜனனி அய்யர் நடிக்கவுள்ளனர். இவருடைய முந்தைய இரண்டு படங்களுக்கும் இசையமைத்த ஆஸ்கார் நாயகர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் மேலும் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு ரஹ்மான் முதல்முறையாக இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மதன் கார்க்கி, தாமரை ஆகியோர் பாடல்களை எழுதவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாகவும் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply