shadow

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
2.0
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் தீம்பார்க் ஒன்றில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இவ்வாரம் முடியவுள்ள நிலையில் அடுத்தவாரம் முதல் 2.0′ படக்குழுவினர் டெல்லி செல்லவுள்ளனர்.

டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை சுமார் 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுள்ள படக்குழு இந்த மைதானத்தில் பிரமாண்ட ரோபோ ஒன்றுடன் ரஜினிகாந்த் மோதும் சண்டைக்காட்சிகளும், ரஜினியும் அக்சயகுமார் மோதும் சண்டைக்காட்சியும் படமாக்கப்படவுள்ளது. இந்த படப்பிடிப்பு இம்மாதம் முழுவதும் டெல்லியில் நடைபெறும் என கூறாப்படுகிறது.

ரூ.350 கோடி செலவில் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ஷங்கர் மிகுந்த பாதுகாப்புடன் இயக்கி வருகிறார்.

Chennai Today News: Rajinikanth’s 2.0 shooting at Delhi Cricket stadium

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *