shadow

ரஜினியின் சூப்பர் ஸ்டைல் புகைப்படம் வைரல்: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார். அங்கு அவர் உடல்நல பரிசோதனை மட்டுமின்றி அமெரிக்க, கனடா ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் ஒருசில புகைப்படங்கள் மட்டுமே வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ரஜினிகாந்த் எஸ்கலேட்டரில் இருக்கும் ஸ்டைலான புகைப்படம் வெளிவந்து இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் நேற்றும் சூப்பர் ஸ்டைலான ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது

இந்த புகைப்படத்தில் கோடு சூட் அணிந்த ரஜினிகாந்த், ஸ்டைலாக நிற்கும் வகையில் உள்ளது. இந்த புகைப்படம் கடந்த சில நிமிடங்களாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Reply