shadow

ரஜினியின் இலங்கை பயணம் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இலங்கை பயணம் ஒருசில அரசியல்வாதிகளால் தடுக்கப்பட்டுள்ள நிலையில் மிக விரைவில் இலங்கை செல்லவுள்ளதாக ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின்மூலம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உங்களின் நலனுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். நம் வாழ்வில் நல்லவை தொடர்ந்து நடக்கட்டும். உரிய நேரம் வரும்போது, நாம் நேரில் சந்திப்போம்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் வெகுவிரைவில் ரஜினிகாந்த் இலங்கை செல்லவுள்ளதாகவும், அதற்கான பொருத்தமான தேதியை அவரது உதவியாளர்கள் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக, ரஜினி அறிவித்தவுடன் இந்த அறிவிப்பு தங்களை ஏமாற்றமடையச் செய்துவிட்டதாகக் கூறி, இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply