shadow

‘கபாலி’ டப்பிங்கை தொடங்கினார் ரஜினி..
kabali
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

இன்று சென்னை ஃபோர்பிரேம்ஸ் டப்பிங் தியேட்டரில் டப்பிங் செய்ய வந்த ரஜினிகாந்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வரவேற்றார். இன்னும் ஓரிரு நாட்களில் ரஜினி பகுதியின் டப்பிங் பணி முடிந்துவிடும் என்றும், அதனையடுத்து ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்டோர்களின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வயதான டான் ஆக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றுள்ளது. முதல்முறையாக ரஜினி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply