shadow

சென்னை திரும்பினார் ரஜினி! அரசியல் அறிவிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல் பரிசோதனை செய்யவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் அமெரிக்கா சென்றார். அவருடன் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சென்றிருந்த நிலையில் நேற்றிரவு இருவரும் சென்னை திரும்பினர். உடல் பரிசோதனை முடிந்துவிட்டதால் ரஜினி சென்னை திரும்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் ‘காலா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ‘காலா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் 50 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ‘தாராவி’ போன்ற பிரமாண்டமான செட் தயார் நிலையில் உள்ளது. அமெரிக்காவில் இருந்து ரஜினி திரும்பியதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அதுமட்டுமின்றி இரண்டாம் கட்டமாக ரசிகர்களை ரஜினி சந்திக்கும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என ரஜினி தரப்பினர் தெரிவித்துள்ளனர். ரசிகர்களுடனான அடுத்தகட்ட சந்திப்பில் அரசியலில் குதிப்பது குறித்து ரஜினி தனது முடிவை அறிவிப்பார் என்று

Leave a Reply