ஜெயலலிதாவிடம் இருந்த துணிச்சல் ரஜினியிடம்: பொதுமக்கள் கருத்து

ரஜினியின் அரசியல் குறித்து பொதுமக்களிடம் ஊடகம் ஒன்று கருத்து கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு தான் இது:

மத்திய அரசை ஒரேயடியாக எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை இல்லாமல், எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்த்து, ஆதரவு தெரிவிக்க வேண்டிய நேரத்தில் ஆதரிப்பவர்களாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருந்தனர்.
அதே முறையைத்தான் ரஜினிகாந்த் பின்பற்றி வருகிறார்

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிஏஏவுக்கு எதிராக குரல் கொடுத்த போது அந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ரஜினி தைரியமாக கூறினார். இந்த விஷயத்தில் அவர் அரசியல் செய்ய விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் முதல் நபராக இறங்கி குரல் கொடுப்பேன் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்

அதேபோல் டெல்லியில் நடந்த கலவரத்தில் 37 பேர் பலியாகியதற்கு உளவுத்துறையின் கவனக்குறைவு தான் காரணம் என்றும் ஒருசிலர் மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்று தைரியமாக கூறினார் அதேபோல் கலவரத்தை அடக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டு போங்கள் என்று ஆவேசமாக கூறினார்

மேலும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய போது திருவள்ளுவருக்கும் எனக்கும் காவி சாயம் பூச வேண்டாம் அது முடியாது என்று அவர் உறுதியாக கூறினார்

ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரிடம் இருந்த அதே துணிச்சலை தற்போது ரஜினியிடம் இதன்மூலம் பார்ப்பதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply